கூடா நட்பு (Kooda natpu) 110 | Thirukkural Kathaigal – 2 | Moral Stories | Magicbox Animation
Loading advertisement...
Preload Image
Up next

Video title

Cancel

கூடா நட்பு (Kooda natpu) 110 | Thirukkural Kathaigal – 2 | Moral Stories | Magicbox Animation

இந்த கதையின் முழுத்தொகுப்பையும் பார்த்து ரசிக்க download செய்யுங்கள்: https://www.magicbox.co.in/Panchatantra-p202273359

“உன் நண்பனைக்காட்டு உன்னை பற்றி கூறுகிறேன்” என்பது பெரியோர் வாக்கு அந்த அளவுக்கு நட்பு வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்று. நாம் நல்லவர்களாக இருந்தாலும் நாம் தேர்வுசெய்யும் நண்பனும் நல்லவனா இருக்கவேண்டும். கூடா நட்பால் குரங்குக்கு ஏற்படும் தீவினை என்ன என்பதை குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் மேஜிக் பாக்ஸ் வழங்கியுள்ளதை இந்த கதையை கண்டு ரசியுங்கள்.

சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று
தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். அவர் எழுதிய திருக்குறள், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்கத் திருக்குறளை மையமாக கொண்டு MagicBox உங்களுக்கு ஒரு சிறுகதையாக தொகுத்து வழங்கியுள்ளது.

To know more about us: https://www.magicbox.co.in/

To #Subscribe our channel click here: https://goo.gl/ovzaVw

To Review our Page on Facebook: https://www.facebook.com/MagicboxAnimation/